Categories
அரசியல் மாநில செய்திகள்

 இடிச்சு தள்ள பிளான் போட்ட ”ஜெ”… திபுதிபுவென கூடிய மாணவர்கள்…. போராடி, வாதாடிய DMK…. டார்கெட் செய்து பேசிய ஸ்டாலின்…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ராணி மேரி கல்லூரியை வெறும் கல்லூரி ஆக மட்டும் சொல்ல முடியாது. பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் பெண் குலத்திற்கு ஒளி விளக்கு என்று தான் சொல்ல வேண்டும். இந்த கல்லூரிக்கு முன்னால் கடற்கரை பகுதியில் கலங்கரை விளக்கு இருக்கு. இது பெண் கல்வியின் உடைய கலங்கரை விளக்காக இந்த ராணி மேரி கல்லூரி ஒளி வீசி கொண்டிருப்பதை நினைவுபடுத்துவது போல் அமைந்துள்ளது.

இந்த ராணி மேரி கல்லூரிக்குள் நுழைகிற போது எனக்கு சில பழைய நினைவுகள் வருது. அவங்க சொன்னாலும் சொல்லாட்டாலும் என் வாழ்க்கையில் என் வாழ்நாளில் அதை மறக்க முடியாது. பழம்பெருமை கொண்டிருக்கக்கூடிய பெரிய வரலாற்றை பெற்றிருக்கக் கூடிய இந்த கல்லூரியை இடிப்பதற்கு ஒரு திட்டம் தீட்டப்பட்டது. முன்னாள் முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள்.

நான் இந்த நேரத்தில் அரசியல் பேச விரும்பவில்லை, அது தேவையும் இல்லை. நான் எப்போதும் அப்படி பேசுவதும் கிடையாது. ஆனால் அன்றைக்கு இந்த கல்லூரியை இடிக்க கூடாது என்று பொன்முடி சொன்ன போது போல சட்டமன்றத்தில் நாங்கள் வாதிட்டோம், போரிட்டோம். இங்கு படித்துக் கொண்டிருந்த மாணவிகள், முன்னாள் மாணவிகள், பேராசிரியர்கள், முன்னாள் பேராசிரியர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய உச்சக்கட்டமாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது என தெரிவித்தார்.

Categories

Tech |