கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை நம்பாதீர்கள் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
சீனாவின் உருவான கொரோனா வைரஸால் அங்குள்ள ஹூபே மாகாணத்தை ருத்தரதாண்டவம் ஆடியது பல்லாயிரக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உலக நாடுகள் பலவற்றிற்கும் பரவியுள்ள கொரோனாவால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் மட்டும் இதுவரை 80,651 பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதில் 3,070 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். சீனாவிற்கு வெளியே இருக்கக்கூடிய பிற நாடுகளிலும் இந்த நோய் பரவி இருக்கிறது.
இந்தியாவை பொருத்தவரை 31 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுகுறித்து பல செய்திகளும், வதந்திகளும் வேகமாக பரவி வந்த நிலையில், பிரதமர் மோடி வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அறிவித்திருக்கிறார். கொரோனா குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக மருத்துவமனைகளில் மருத்துவரை அணுக வேண்டும். என்ன செய்ய வேண்டும்செய்யக்கூடாது ? என்ன செய்ய கூடாது ? என்று மருத்துவரிடம் கேளுங்கள் என்று மக்கள் மருந்தக திட்டத்தில் பயன் அடைந்தோர் மத்தியில் பிரதமர் மோடி இவ்வாறு அறிவுரை வழங்கி இருக்கிறார்.