Categories
மாநில செய்திகள்

சினிமாவில் ஜெயித்து அரசியலில் தோற்கும் உதயநிதி….. மூத்த பத்திரிகையாளர் வெளியிட்ட எச்சரிக்கை….!!!!

தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் விநியோகஸ்தர் என பன்முகத்துடன் இயங்கி வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஆகவும் அரசியல் தனது பங்களிப்பை செலுத்தி வருகிறார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது, ரெட் ஜெயன்ட் மூவிஸ் பிற தயாரிப்பு நிறுவனங்களின் திரைப்படங்களின் விநியோகஸ்தர் உரிமையை வாங்கி வெளியிடுவது திரைத்துறை பொறுத்தவரை சரியாக இருக்கலாம். திமுகவின் கையில் ஆட்சி அதிகாரம் இருப்பதால் அந்த கட்சியை சேர்ந்த முக்கிய நபரான உதயநிதிக்கு சொந்தமான நிறுவனம் திரைப்படங்களை வெளியிடும் போது சினிமா விநியோகமும் அது சார்ந்த வணிகமும் எந்த வித பிரச்சனையுமின்றி நடைபெறும் என்பது ஒரு விதத்தில் உண்மைதான். ஆனால் திமுகவின் எதிர்காலமே, வருங்காலமே முதல்வர், என்று உடன்பிறப்புகளால் பார்க்கப்படும் உதயநிதி ஸ்டாலின் திரைத்துறை மீதான ஆர்வம் அரசியல் ரீதியாக மிகப்பெரிய தவறு.

இனி உதயநிதி சினிமா துறையின் மீதான ஆர்வத்தை குறைத்துக் கொண்டு ஒரு முதல்வராகவும், கட்சி தலைவராக முதல்வர் ஸ்டாலின் எப்படி செயல்படுகிறார். மழை, வெள்ளம், கோவை குண்டுவெடிப்பு சம்பவம் என்று ஒவ்வொரு பிரச்சனையும் அவர் எவ்வாறு எதிர்கொள்கிறாரோ, எவ்வாறு சமாளிக்கிறாரோ என்பதையெல்லாம் அவர் அருகில் இருந்து பார்த்து நிறைய அரசியல் பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும். தொடர்ந்து சினிமாவில் ஆர்வம் காட்டி வந்தால் அதுவே திமுக அழிவுக்கு ஆரம்பமாக அமைந்துவிடும். இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான கழகத் தலைவன் திரைப்படத்தை பார்த்து விட்டீர்களா? என்று முதல்வர் ஸ்டாலின் வாக்கிங் போகும்போது கேட்பதும், அது குறித்த வீடியோ பொதுவெளியில் வைரலாவதும் ஸ்டாலின் தனது மகன் உதயநிதி நடித்த படத்தை புரமோட் செய்வதாகவே ஒரு புறம் புரிந்து கொள்ளப்படும். மேலும் முதல்வரின் இது போன்ற வெளிப்பாடும் திமுகவுக்கு நல்லதல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |