Categories
மாநில செய்திகள்

“எனக்கு அந்த பதவியை வழங்குங்கள்”…. கார்த்திக் சிதம்பரம் முக்கிய கோரிக்கை….!!!

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் தன்னுடைய சொந்த தொகுதியில் சுற்றுபயணம் மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சத்தியமூர்த்தி பவன் பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், தமிழக காங்கிரஸ் கட்சி பதவி தனக்கு வழங்கினால் சத்தியமூர்த்தி பவனியில் நடக்கும் பிரச்சினைகளை முற்றுப்புள்ளி வைப்பேன். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை தனக்கு வழங்க கோரி பலமுறை அறிவித்திருக்கிறேன்.

அதனை தொடர்ந்து பதவி வழங்கினால் திறம்பட செயல்படுவேன் என்றும் சத்தியமூர்த்தி பவன் சம்பவம் வருத்தம் தரக்கூடியது, விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் தவறு செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை இருக்கும் என்று நம்பிக்கை உள்ளது. மேலும் மூத்த தலைவர்களையும் அரவணைத்து செல்வேன் புதிய ரத்தங்களை உள்ளே கொண்டு வருவேன். இதனையடுத்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், இருக்கின்ற கூட்டணிலேயே வலுவான கூட்டணி திமுக-காங்கிரஸ் கூட்டணி தான். பாஜக-திமுக கூட்டணி மக்கள் ஏற்க மாட்டார்கள். திமுக-காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |