Categories
உலக செய்திகள்

ஹைப்போ நெட்ரீமியா தான் காரணமா…? புரூஸ்லி மரணத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

பிரபல நடிகர் மற்றும் தற்காப்பு கலை ஜாம்பவனான புரூஸ் லீ 1973- ஆம் வருடம் 32 வது வயதில்  பெருமூளை வீக்கம் ஏற்பட்டு உயிரிழந்தார். ஆனால் அப்போது வலி நிவாரணி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டதால் மூளையில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் நம்பியுள்ளனர்.  கிட்டத்தட்ட 50 வருடங்களுக்குப் பின் தற்போது புரூஸ்லீ மரணம் குறித்த ஆச்சரியப்படும் செய்தி  ஒன்று வெளியாகி உள்ளது. கிளினிக்கல் கிட்னி ஜர்னலில் வெளியிடப்பட்ட  ஆய்வில் கூறப்பட்டிருப்பதாவது, புரூஸ்லீயின் மரணத்திற்கு அதிக அளவு தண்ணிர் காரணமாக இருக்கலாம். மேலும் சிறுநீரகங்கள் உடலில் அதிகப்படியான நீரை வெளியேற்ற முடியாமல் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதாவது நிபுணர்களின் கூற்றுப்படி அதிகப்படியான தண்ணீர் குடிப்பதனால் சோடியத்தின் அளவை குறைக்கிறது. உடலில் உள்ள இந்த நிலையானது ஹைப்போ நெட்ரீமியாவை ஏற்படுத்தும். இதனால் மரணமும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக அளவிலான தண்ணீர் குடிப்பதால் குடலில் வீக்கம் ஏற்படுகிறது. அதிக அளவிலான தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனையின் அறிகுறிகளாக சோர்வு, வயிற்று வலி, வாந்தி போன்றவை ஏற்படுகிறது. இது போன்ற பிரச்சினைகளை நீங்கள் எதிர்கொண்டால் அதிக நீரேற்றத்தின் அறிகுறியாக இருக்கலாம். அதனால் அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியின் கூற்றுப்படி, தினமும் ஒரு நபர் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும்.

இந்நிலையில் புரூஸ்லீ அதிக நேரம் கேரட் மற்றும் ஆப்பிள் ஜூஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்வார் அவரது மனைவி லிண்டா தெரிவித்துள்ளார். மேலும் புரூஸ்லீ எ லைஃப் புத்தகத்தின் ஆசிரியர் மேத்யூ பாலி லீ ஒரு நாளில் அதிக அளவில் தண்ணீர் குடிப்பதை பதிவு செய்துள்ளார். இந்நிலையில் வெளியான மருத்துவ அறிக்கையின் படி போதைப்பொருள் மருந்துகள், உப்பு குறைவு, கிட்னி செயலிழப்பு, அதிக உடற்பயிற்சி போன்ற காரணங்களும் அவரது மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக அவரது உடலில் எடுத்துக் கொண்ட தண்ணீரின் அளவு சிறுநீராக வெளியேற்றப்படவில்லை. மேலும் ஆராய்ச்சியாளர்கள் ஒரு குறிப்பிட்ட வகை சிறுநீரக செயலிழப்பால் தான் புரூஸ்லீ உயிரிழந்துள்ளார் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

Categories

Tech |