Categories
சினிமா தமிழ் சினிமா

முதல்முறையாக ஜம்மு-காஷ்மீரில் குறும்படத் திருவிழா… சமர்ப்பிக்க டிசம்பர் 10 கடைசி… வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு…!!!

ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக குறும்பட திருவிழா நடைபெற உள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதியில் முதல் முறையாக குறும்பட திருவிழா நிகழ்ச்சியை இந்திய ராணுவம் ஏற்பாடு செய்திருக்கின்றது. இதற்கு தில் மாங்கோ மோர் என பெயரிட்டுள்ளார்கள். இந்த திட்டமானது இந்திய ராணுவத்தின் கேப்டன் ராகுல் பலி அவர்களின் யோசனையின் பேரில் ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக பிரதமரின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்பட்டது.

வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதிக்குள் ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் 5 முதல் 15 நிமிடம் இருக்கும் குறும்படங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த திருவிழாவின் கடைசி நாளில் பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்பார்கள். இதில் முதல் பரிசுக்கு 1 லட்சமும் இரண்டாவது பரிசுக்கு 75 ஆயிரமும் மூன்றாவது பரிசுக்கு 50,000 வழங்கப்பட உள்ளது. மேலும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும்.

Categories

Tech |