தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் நடிப்பில் அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க, ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஜிஎப் பற்றிய கதை என்று இயக்குனர் கூறியுள்ளதால் தங்கலான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கிறது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் விக்ரம் தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் பெரிய தாடியுடன் மிகப் பெரிய பொறுப்பு வருகிறது. தங்கலான் என்று பதிவிட்டுள்ளார். அதோடு சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். மேலும் நடிகர் விக்ரமின் டீவீட் பதிவு தற்போது வலை தளத்தில் வைரலாகி வருகிறது.
“With great beard comes great responsibility!” 😉 #Thangalaan pic.twitter.com/h9iH5s6EIn
— Vikram (@chiyaan) November 22, 2022