Categories
உலக செய்திகள்

ஐஸ்கிரீமை நக்கிய இளைஞனுக்கு ஜெயில்… உண்மை என்ன?… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

டெக்சாஸில்  இளைஞர்  ஒருவர்  பிரபல சூப்பர் மார்க்கெட்டில் உள்ள ஐஸ்கிரீமை  நக்கி  எச்சில் செய்து விட்டு அதை மீண்டும்  ஃப்ரீசரில் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டெக்சாஸில் ஆட்ரியன் ஆண்டர்சன் (D’Adrien Anderson) என்ற 24 வயதான இளைஞர் ஒருவர் பிரபல சூப்பர் மார்க்கெட்டில் உள்ள ஐஸ்கிரீமை எடுத்து அதன் மூடியை திறந்து நக்கி அதை ருசித்து விட்டு மீண்டும் அதே பெட்டியில் வைத்துள்ளார். இதை  தனது செல்போனில்  வீடியோவாக பதிவு  செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

‘ஆட்ரியன் ஆண்டர்சன் ஐஸ்கிரீமை நக்கும் வீடியோ கடந்த ஆண்டு ஆகஸ்டில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. வீடியோ வைரல் ஆன பிறகு, இதுகுறித்த பலர்   பாதுகாப்பு கேள்விகள் எழுப்பினர். இந்த வீடியோ பதிவு இணையத்தில் அகற்றப்படுவதற்கு முன்பு பேஸ்புக்கில் 157,000 க்கும் மேற்பட்ட பார்வைகள் பார்த்துள்ளனர்.

Image result for US man jailed for licking ice cream tub and putting it back in the freezer at supermarket

இந்நிலையில் இவ்விதமான குற்றச்சம்பவம் செய்ததற்காக புதன்கிழமை அன்று  30 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். மேலும், அவருக்கு 1,000 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது (RS 73,000 க்கு மேல்) என்று அமெரிக்க ஊடக  தெரிவித்துள்ளது.

மேலும், வரும்காலங்களில் இது மாதிரியான தவறுகள் நடைபெறாமல் இருக்க அந்த நிறுவனம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை  ஏற்படுத்திவருகிறது. அந்த ஃப்ரீசரில் உள்ள அனைத்து ஐஸ்கிரீம்களும் அப்புறப்படுத்தப்பட்டது.

 

 

 

Categories

Tech |