பெங்களூரிலிருந்து வட மாநிலங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில் தமிழகம் வழியாக இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி பீகாரில் இருந்து பெங்களூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் வருகின்ற நவம்பர் 28, டிசம்பர் 5, 12 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகின்றது. பீகாரில் இருந்து திங்கட்கிழமை மாலை 6.10 மணிக்கு புறப்படும் ரயில் பெரம்பூர், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை வழியாக புதன்கிழமை மாலை 6.20 மணிக்கு பெங்களூர் வந்தடையும். வரும் மார்க்கமாக நவம்பர் 24ஆம் தேதி, டிசம்பர் 1, டிசம்பர் 8 மற்றும் டிசம்பர் 15 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகின்றது.
பீகாரில் இருந்து எர்ணாகுளத்திற்கு நவம்பர் 28 , டிசம்பர் 5 மற்றும் டிசம்பர் 12 ஆகிய தேதிகளில் வாராந்திர சிறப்பு முறையில் இயக்கப்படுகின்றது. மறு மார்க்கமாக நவம்பர் 24, டிசம்பர் 1,டிசம்பர் 8 மட்டும் டிசம்பர் 15 ஆகிய தேதிகளில் வாராந்திர சிறப்பு முறையில் இயக்கப்படும் எனவும் இந்த ரயில் கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் பெரம்பூர் வழியாக செல்லும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.