மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் கட்டாயம் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பித்தால் மட்டுமே பென்ஷன் தொகை முறையாக வந்து சேரும். ஓய்வூதியதாரர்கள் எளிதாக வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்காக மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சேவையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அது மட்டுமல்லாமல் வங்கிகள்,தபால் நிலையங்கள் மற்றும் தபால் துறை வங்கி ஆகியவை ஓய்வூதியதாரரின் வீட்டிற்கு நேரடியாக வாழ்நாள் சான்றிதழை வாங்கி சமர்ப்பிக்கும் சேவையை வழங்கி வருகின்றது. மத்திய அரசு மட்டுமல்லாமல் மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த சேவை வழங்கப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து ஓய்வூதியதாரர்களும் நவம்பர் மாதம் இறுதிக்குள் வாழ்நாள் சாதனைகளை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. குறிப்பிட்ட சில ஓய்வூதியதாரர்களுக்கு நவம்பர் 30ஆம் தேதிக்குள் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு வருடத்திற்குள் பென்சன் தொடங்கி இருக்க வேண்டும். 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பின்பு உங்களுக்கு பென்ஷன் கிடைக்க தொடங்கி இருக்க வேண்டும்.
2021 ஆம் ஆண்டு டிசம்பர் அல்லது அதற்குப்பின் கடைசியாக வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்திருக்க வேண்டும். மேலும் EPFO பென்ஷன் பெறும் ஓய்வூதியத்தாளர்கள் நவம்பர் மாதம் இறுதிக்குள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டாம். ஏனென்றால் இந்த பென்ஷன் பெறும் ஓய்வூதியதாரர்கள் கடைசியாக வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பித்த ஒரு ஆண்டுக்குள் அடுத்த வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்தால் போதும்.