அமெரிக்க நாட்டில் கடுமையாக பனிப்பொழிவு ஏற்பட்டதில், நியூயார்க் மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.
அமெரிக்க நாட்டின் பல மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. இதிலும் நியூயார்க்கில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகமாக பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. அம்மாகாணம் மொத்தமும் கடுமையான காற்று வீசுவதோடு பனி கொட்டிக் கொண்டிருக்கிறது.
அங்கிருக்கும் ஏரி நகரத்தில் ஒரே நாளில் சுமார் 150 சென்டிமீட்டர் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இதன் காரணமாக குடியிருப்புகள், சாலைகள் வாகனங்கள் என்று அனைத்திலும் பனி கொட்டி கிடக்கிறது. குளிர் அதிகரித்துக் கொண்டிருப்பதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.
அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்து இருக்கிறது. சாலைகளில் கொட்டி கிடக்கும் பனியை நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனிடையே அதிபர் ஜோ பைடன் அவசரநிலை பிரகடனம் செய்திருக்கிறார். அம்மாகணத்தில் பாதிப்படைந்த பகுதிகளில் தீவிரமாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.