தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் அரசு நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதன்படி இதுவரை நகை கடன் தள்ளுபடி, மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என அடுத்தடுத்து பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இந்நிலையில் பெண்களுக்கு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது விரைவில் மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அவர் அறிவித்துள்ளார். அதனைப் போலவே விவசாயிகளுக்கான பயிர் கடலும் தள்ளுபடி செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.