நடப்பாண்டில் கடந்த அக்டோபர் மாதம் வரை உள்நாட்டு விமான போக்குவரத்து விவரங்களை சிவில் விமான போக்குவரத்து இயக்குனராக நேற்று வெளியிட்டது. அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை காலகட்டத்தில் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கையை விட இந்த ஆண்டு அக்டோபர் மாத வரை பயணித்த உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை 59.16% அதிகரித்து உள்ளது. அதாவது கடந்த ஆண்டு 6,20,96,000 பயணிகள் பயணம் செய்த நிலையில் இந்த ஆண்டு இதுவரை 9, 88,30,000 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
அதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் அடிப்படையில் கணக்கிட்டால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை விட இந்த ஆண்டு அக்டோபர் மாத 27%வளர்ச்சியை பெற்றுள்ளது. அதாவது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 89.85 லட்சம் பயணிகள் பயணித்து நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1 கோடியே 14லட்சம் பயணிகள் சென்றுள்ளனர். ஆனால் இந்த வளர்ச்சி கொரோனா தொற்றுக்கு முந்தைய நிலையை இன்னும் எட்டவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.