Categories
தேசிய செய்திகள்

12 பா.ஜ.க நிர்வாகிகள் கட்சியிலிருந்து இடைநீக்கம்…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

குஜராத் சட்ட சபைக்கு 2 கட்டங்களாக டிசம்பர் 1, 5 போன்ற தேதிகளில் ஓட்டுப் பதிவு நடைபெற இருக்கிறது. டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெற இருக்கும் முதல்கட்ட தேர்தலின் போது 89 தொகுதிகளுக்கும், 5ஆம் தேதி 2வது கட்ட தேர்தலின் போது 99 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது. இதையடுத்து டிச..8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையானது நடைபெறும். அம்மாநிலத்தில் சென்ற 1995ம் வருடம் முதல் ஆட்சி அதிகாரத்திலுள்ள பா.ஜ.க. இம்முறையும் வெற்றியை தக்க வைத்துகொள்ளும் பணிகளில் இறங்கியுள்ளது.

இதனிடையில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற போராடுகிறது. புதியதாக அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் இத்தேர்தலில் போட்டியிடுகிறது. இதற்கிடையில் குஜராத் தேர்தலில் போட்டிபோடும் வேட்பாளரின் பட்டியலை பல்வேறு கட்டங்களாக பா.ஜ.க வெளியிட்டது. இவற்றில் முதற்கட்ட தேர்தலில் 38 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டுமாக போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், பரிசீலனை திரும்பப் பெறல் யாவும் முடிந்துள்ள சூழலில், அங்கு 1,621 வேட்பாளர்கள் போட்டியில் இருக்கின்றனர்.

முதற்கட்ட தேர்தலை 788 வேட்பாளர்களும், 2வது கட்ட தேர்தலை 833 வேட்பாளர்களும் சந்திக்கின்றனர். மேலும் குஜராத் சட்டசபை தேர்தலில் 42 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு போட்டியிட மீண்டுமாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக சிலர் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்து இருக்கின்றனர். இந்நிலையில் சுயேட்சையாக மனு தாக்கல் செய்த 12 பா.ஜ.க நிர்வாகிகள் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து மாநில தலைவர் சி.ஆர்.பாட்டீல் உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்பாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், சுயேட்சையாக போட்டியிட முயன்ற 7 பேர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |