காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க இந்திய ராணுவ ‘ஆபரேஷன் ஈசி’ என்கின்ற பெயரில் தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றது. இந்த ஆப்ரேஷன் கடந்த 1948 ஆம் ஆண்டு நடைபெற்றது.இதனை முன்னிட்டு நேற்று 75 ஆவது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது. லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி தலைமையில் பூஞ்ச் மாவட்டம் மக்கள் மற்றும் ராணுவத்தினர் இதை உற்சாகமாக கொண்டாடினர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜம்மு காஷ்மீரில் 300 பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர். ஆனால் அவர்கள் எந்த தாக்குதலும் நடத்த முடியாது என்பதை நாங்கள் உறுதியாக கூறுகிறோம். இதனையடுத்து காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரின் பாதுகாப்பு நிலமை ஒரு பெரிய மாற்றத்திற்கு உட்பட்டு உள்ளது. அமைதி மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதை உறுதி செய்யும் யூனியன் பிரதேச நிர்வாகம் சிறந்த வேலையை செய்து வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.