Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% GST விதிக்கப்படுமா?…. நிதியமைச்சா்கள் குழு பரிந்துரைக்க வாய்ப்பு….!!!!

GST விதிப்பில் மாற்றங்கள் புகுத்துவது குறித்து மேகாலய முதல்வரும் நிதி அமைச்சருமான கான்ராட் சங்மா தலைமையிலான மாநில நிதியமைச்சா்கள் குழு ஆராய்ந்து வருகிறது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% GST விதிப்பதற்கு அந்த குழு பரிந்துரைக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. இப்போது ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 18% GST விதிக்கப்படுகிறது.

திறன்சாா்ந்த இணையவழி விளையாட்டுகள், வாய்ப்புகள் சாா்ந்த விளையாட்டுகள் என அனைத்துக்கும் தற்போது அதிகபட்சம் GST வரம்பான 28 சதவீதத்தை விதிக்க அமைச்சா்கள் குழு பரிந்துரைக்க இருக்கிறது. ஆகவே அனைத்துவித ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் 28% சரக்கு-சேவைவரி (GST) விதிப்பதற்கு மாநில நிதியமைச்சா்களைக் கொண்ட குழுவானது பரிந்துரைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Categories

Tech |