Categories
தேசிய செய்திகள்

ஷாக் தகவல்!…. பி.எம் கிசான் திட்டத்தில் ஆதார் இணைக்காத விவசாயிகள்….. ரூ. 6000 பெறுவதில் திடீர் சிக்கல்….!!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் வருடம் தோறும் 6 ஆயிரம் ரூபாய் தவணை முறையில் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப் பட்ட நிலையில், தமிழகத்தில் 48 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அந்த சமயத்தில் நில உரிமை தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிப்பது கட்டாயமாக படவில்லை என்பதால் நிறைய விவசாயிகள் திட்டத்தில் இணைந்தனர்.

அதன் பிறகு திட்டத்தில் பயன்பெறுவதற்காக பதிவு செய்திருந்த போலி விவசாயிகள் 37 லட்சம் பேர் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டனர். இதன் காரணமாக பதிவு செய்யும் விவசாயிகள் பெயரில் நிலம், பட்டா போன்ற ஆவணங்கள் இருக்க வேண்டும் எனவும், வீட்டில் அரசு அதிகாரி யாராவது இருந்தால் அவர்களுக்கு‌ 6000 தொகை வழங்கப்படாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.  இந்த நிபந்தனைகளின் காரணமாக தமிழகத்தில் சுமார் 6 லட்சம் விவசாயிகள் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டனர்.

அதன் பிறகு பட்டா, பெயர் மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களினால் 5 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையானது நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது 23.3 லட்சம் பேர் திட்டத்தின் மூலம் பயன் அடைந்து வரும் நிலையில், பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டால் 5 லட்சம் விவசாயிகள் இணைக்கப்பட மீண்டும் வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் பயனடைபவர்கள் கண்டிப்பாக ஆதார் அட்டையை இணைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக ஆய்வு செய்ததில் தமிழகத்தில் 9 லட்சம் விவசாயிகள் ஆதார் அட்டையை பிஎம் கிசான் திட்டத்துடன் இணைக்காமல் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தற்போது திட்டத்திலிருந்து நீக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கிறது. எனவே பயனாளிகளாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக ஆதார் அட்டையை விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தோடு இணைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |