Categories
தேசிய செய்திகள்

“இனி விமானத்தில் தேங்காய் கொண்டு செல்லலாம்”….. சபரிமலை பக்தர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது மகர விளக்கு பூஜையானது நடைபெற்று வருவதால் நடை திறக்கப் பட்டுள்ளது. அதன் பிறகு வருடம் தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார்த்திகை மாதத்தில் இருமுடி கட்டி ஐயப்பன் கோவிலுக்கு செல்வார்கள். இந்த பக்தர்களின் வசதிக்காக தற்போது கோவில் நிர்வாகம் பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் அவசர சிகிச்சை மையம் மற்றும் தரிசன நேரம் நீட்டிப்பு போன்ற ‌ சலுகைகள் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்காக செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிசிஏஎஸ் கடந்த திங்கள் கிழமை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சபரிமலை திருக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இருமுடி எடுத்துச் செல்லும்போது கையில் தேங்காய் மற்றும் நெய் உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் செல்வார்கள். இதில் தேங்காய் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள் என்பதால் அதை விமானத்தில் எடுத்துச் செல்வதற்கு அனுமதி கிடையாது. ஆனால் தற்போது பக்தர்களின் வசதிக்காக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தேங்காயை விமானத்தில் எடுத்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 20-ம் தேதி வரை பக்தர்கள் விமானத்தில் தேங்காயை கொண்டு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |