அமெரிக்க நாட்டில் பல்பொருள் அங்காடி ஒன்றில் மர்ம நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டதில் பல பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டின் விர்ஜினியா மாகாணத்தில் இருக்கும் பல்பொருள் அங்காடி ஒன்றில் ஒரு மர்ம நபர் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார். அதன்பிறகு, அங்கிருந்த மக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டார்.
இதில் பல பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு தாக்குதல் மேற்கொண்ட நபரை கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், பலர் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.