Categories
தேசிய செய்திகள்

நிதி நெருக்கடியில் இருக்கும் யெஸ் வங்கியின் 49% பங்குகளை எஸ்.பி.ஐ., வாங்க முடிவு!

 நிதி சிக்கலில் தவிக்கும் யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வாங்க முடிவு செய்துள்ளது.

தனியார் வங்கியான எஸ் பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் யெஸ் பேங்க்கின் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியிட ரிசர்வ் வங்கி, ஏப்ரல் 3 ஆம் தேதி வரை யெஸ் வங்கிக்கு எதிராக எந்தவிதமான சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க முடியாது என தெரிவித்துள்ளது.

இந்த ஒரு மாத காலத்திற்கு யெஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர் தங்கள் கணக்கில் இருந்து ரு.50,000 வரை மட்டுமே பணம் எடுக்க முடியும்.

மருத்துவம், கல்வி, திருமணம், தவிர்க்க முடியாத அவசர தேவைகளுக்கு மட்டும் வங்கி மேலாளரின் அனுமதியுடன் ரூ.5 லட்சம் வரை பணம் எடுக்கலாம் என கூறப்பட்டது. மேலும் அடுத்த 30 நாட்களுக்கு யெஸ் வங்கியை நிர்வகிக்க எஸ்.பி.ஐ., வங்கியின் முன்னாள் அதிகாரி பிரசாந்த் குமாரை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எஸ்.பி.ஐ., சேர்மன் ரஜ்னிஷ் குமார், சிக்கலில் உள்ள யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை வாங்க எஸ்.பி.ஐ., முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.2,450 கோடி முதலீடு செய்ய வேண்டியுள்ளது. யெஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் வைத்துள்ள வைப்பு நிதி பாதுகாப்பாக இருக்கும் என்று தகவல் அளித்துள்ளார்.

Categories

Tech |