Categories
தேசிய செய்திகள்

நீங்க டூப்ளிகேட்டா?…. ராணுவத்தில் 4 மாதங்கள்….. வெளியான பரபரப்பு உண்மைகள்…..!!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞர் ராணுவத்தில் கடந்த 4 மாதங்களாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இளைஞர் ராணுவப் பணியில் சேர்க்கப்படவே இல்லை என்ற அதிர்ச்சிகர உண்மை தெரியவந்திருப்பதாக அவர் தரப்பில் அளிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராணுவ அடையாள அட்டை, ராணுவ சீருடை உடன் அவர் போலீஸ் நிலையத்தில் அளித்து இருக்கும் புகார் ராணுவத்தில் ஆள் சேர்ப்பில் நடைபெற்ற அதிர்ச்சியளிக்கும் முறைகேட்டை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறுவதாவது, உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் என்ற இளைஞர் சென்ற ஜூலை மாதம் ராணுவத்தில் இருந்து பணி ஆணை வந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, ராணுவத்தில் 4 மாதங்கள் பணியாற்றி மாதம் ரூ.12,500 ஊதியமும் பெற்று வந்தார். ஆனால் உண்மையில் காஸியாபாத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் (20) கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டு பிழைப்பு நடத்தி வந்துள்ளார். முன்னதாகவே ராணுவத்தில் சிப்பாயாக பணிபுரிந்த ராகுல்சிங்கின் வலையில் மனோஜ்குமார் சிக்கி இருக்கிறார்.

இராணுவத்தில் மிகப் பெரிய பதவியில் உள்ளதை போன்று ராகுல்சிங் நடந்து கொண்டிருக்கிறார். பணம் தந்தால் ராணுவத்தில் பணி வாங்கித் தருவதாக ராகுல்சிங்கின் உதவியாளர்கள் விரித்த வலையில் விழுந்த மனோஜ்குமார் ரூ.16 லட்சத்தை கொடுத்துள்ளார். அதன்பின் அவருக்கு ராணுவத்தில் பணி கிடைத்து விட்டதாக ராகுல்சிங் கூறி, ராணுவ சீருடையும் துப்பாக்கியும் கொடுத்து இருக்கிறார். அதன்படி 4 மாதங்கள் ராணுவ முகாமிற்கு வெளியே துப்பாக்கியை வைத்துக்கொண்டு பாதுகாப்பில் ஈடுபடுவதும், ராகுல் சிங் கூறும் வேலைகளையும் மனோஜ்குமார் செய்து வந்துள்ளார். இதற்கிடையில் மனோஜ்குமார் பணி பற்றி சக ராணுவ வீரர்கள் அவ்வப்போது சந்தேகம் எழுப்பியதால், அது குறித்து விசாரணை நடத்தபட்டது.

அப்போதுதான் ராணுவத்தில் மனோஜ்குமார் பணியமர்த்தப்படவே இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மனோஜ்குமார் கூறியதாவது, ஒரு நாள் என்னை ராணுவ முகாம் இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு உயரதிகாரி போன்று இருந்த ஒருவர் என்னை பரிசோதித்தார். அதன்பின் சில நாட்கள் கழித்து எனக்கு வேலை கிடைத்து விட்டதாகக் கூறினார்கள். அதனை தொடர்ந்து கையில் துப்பாக்கிக் கொடுத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டேன். பிறகு தான் முகாமில் இருந்த மற்ற ராணுவ வீரர்கள் என் அடையாள அட்டை போலியானது என கூறினார்கள். பின் தொடர் விசாரணையில் நான் இராணுவத்தில் பணியமர்த்தப்படவில்லை என்பது தெரியவந்து இருப்பதாக கூறினார்.

Categories

Tech |