Categories
மாநில செய்திகள்

#BREAKING: சென்னையில் பள்ளிக்கு ஒரு வாரத்துக்கு லீவ் – மெசேஜ் அனுப்பிய பள்ளி நிர்வாகம்..!!

சென்னை திருவெற்றியூரில் உள்ள ஏஞ்சல் மெட்ரிக் பள்ளி ஒரு வாரம் இயங்காது என பள்ளி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஞ்சல் மெட்ரிகுலேஷன்  பள்ளி தாளாளர் வினோத் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளித்ததையடுத்து பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்டு மாணவர்கள் காலை 9:00 மணி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடவடிக்கை தாமதமாவதை கண்டித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் போலீஸருக்கும் – மாணவர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பட்டாபிராம் காவல் உதவி ஆணையர் சதாசிவம் மாணவரிடம் பேச்சுவார்த்தை நடத்தையை தொடர்ந்து மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள்ளேயே உள்ளிருப்பு போராட்டத்தை காலை 9 முதல் தற்போது வரை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் மாணவர்களின் போராட்டம் வலுப்பெற்றதையடுத்து காவல்துறை பள்ளி தாளாளர் வினோத் மீது போஸ்கோ உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து மாணவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் உறுதி அளித்து வழக்கு குறித்த விவரங்களை மாணவர்களுக்கு தெரிவித்தனர். இதனால் பள்ளியில் போராட்டம் நடத்தி வந்த மாணவர்கள் கலைந்து சென்றனர். தற்பொழுது பள்ளி நிர்வாகத்தினர்  பள்ளி ஒரு வாரம் இயங்காது எனவும்,  பள்ளி மிட்டம் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாகவும், தேதி பின்னர் அறிவிப்பதாகவும் மெசேஜ் அனுப்பி உள்ளனர்.

Categories

Tech |