நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வரும் என விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த திட்டத்தில் தமிழகத்தில் தற்போது வரை 23.03 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் 9 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைக்காததால் 6000 ரூபாய் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே அவர்கள் விரைவில் ஆதார எண்ணை இணைக்காவிட்டால் பயனாளிகள் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும் நிலை உருவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் இதுவரை ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் பிஎம் கிசான் திட்டத்துடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.