புல்வாமா தாக்குதலுக்கான வெடிகுண்டு தயாரிக்க தேவையான பொருட்கள் அமேசானில் ஆர்டர் செய்து வாங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. புல்வாமா தாக்குதல் தொடர்பாக 2 தீவிரவாதிகளை NIA அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதில் 19 வயது நிரம்பிய வசூலில் என்ற தீவிரவாதி வைசூல் புல்வாமா தாக்குதலுக்கு முன்பாக தன்னுடைய ஆன்லைன் ஷாப்பிங் கணக்கை பயன்படுத்தி வெடிகுண்டு தயாரிப்பதற்கான வேதிப் பொருட்கள் , பேட்டரிகள் உள்ளிட்டவற்றை அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தின் மூலம் வாங்கியுள்ளதாக NIA அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.