விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பிக்பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார்.
அடுத்ததாக ஜி. பி. முத்து தாமாக வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி போன்றோர் எலிமினேட் ஆனார்கள். பிக்பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக மாறியுள்ளது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் போட்டியாளரான நிவாஷினி, சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார்.
அப்போது பிக்பாஸ் வீட்டில் யார் பயங்கரமானவர் என கேட்டபோது நிவாஷினி, விக்ரமன் எனக் கூறினார். மேலும் அசீம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அசீம் ரொம்ப நல்லவர் எதையும் முகத்திற்கு நேராக கூறுவார். ஆனால் விக்ரமனை நம்புவது கஷ்டம் என கூறியுள்ளார்.