மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி கர்ணன் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். தற்போது இவர் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதி கட்ட வேலைகள் நடந்து வருகின்றது. இந்த நிலையில் மாரி செல்வராஜின் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை சென்ற சில நாட்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்திற்கு வாழை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் கலையரசன் ஹீரோவாக நடித்த நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா மற்றும் சிறுவர்கள் நடிக்க இருக்கின்றார்கள். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ நாராயணன் இசை அமைக்கின்றார். இந்த நிலையில் இப்படம் உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுவதாக சொல்லப்படுகின்றது. மாரி செல்வராஜ் எழுதிய சிறுகதையை தழுவி இந்த படம் உருவாக்க இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்க செய்துள்ளது.