Categories
சினிமா தமிழ் சினிமா

வாரிசு திரைப்படம் எவ்வித சிக்கலுமின்றி தெலுங்கில் ரிலீஸ் ஆகும்….. தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், தெலுங்கு ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது பொங்கல் பண்டிகையின் போது தெலுங்கு படங்களுக்கு மட்டும் தான் தியேட்டர் ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டது.

இதற்கு தமிழ் சினிமாவைச் சேர்ந்த பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார். அவர் வாரிசு திரைப்படத்தின் தெலுங்கு ரிலீஸ் தொடர்பாக தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்திடம் பேசி உள்ளோம். அவர்கள் இது தொடர்பாக நல்ல முடிவை எடுப்பதாக கூறியுள்ளனர். மேலும் வாரிசு திரைப்படம் எவ்வித சிக்கலும் இன்றி சொன்ன தேதியில் தெலுங்கு சினிமாவில் ரிலீஸ் ஆகும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |