தமிழ் சினிமாவில் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரை அரங்கில் ரிலீஸ் ஆன பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடி வசூலை கடந்து மாபெரும் ஹிட் ஆனது. கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தை மணிரத்தினம் இயக்க, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். அதன்பிறகு பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தையும் முதல் பாக சூட்டிங்கின் போதே எடுத்து முடித்து விட்டதாகவும் தொழில்நுட்ப பணிகள் மட்டுமே பெண்டிங் இருப்பதாகவும் படக்குழு கூறியிருந்தது.
ஆனால் பொன்னியின் செல்வன் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றதால் கூடுதல் காட்சிகளை படமாக்குவதற்கு இரண்டாம் பாகத்தில் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கூடுதல் காட்சிகளை இயக்கலாம் என கார்த்திக்கை அணுகிய போது அவர் மீண்டும் தாடி வளர்க்க வேண்டும் என்பதால் சூட்டிங் வருவதற்கு மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோன்று விக்ரம் மற்றும் ஜெயம் ரவியும் அடுத்தடுத்த படங்களை காரணம் காட்டி சூட்டிங் வருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நடிகை ஐஸ்வர்யா ராயிடம் நந்தினி கதாபாத்திரத்தை கூடுதல் படமாக்குவது குறித்து கேட்டபோது அதற்கு ஐஸ்வர்யா ராய் ஒத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படக்குழு மும்பைக்கு சென்று அங்கேயே படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.