உலக அளவில் அதிக வசூல் சாதனை படைத்து முதலிடத்தில் இருக்கும் திரைப்படம் அவதார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாரான நிலையில் டிசம்பர் 16-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வீடியோக்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் அவதார் படத்தின் டிக்கெட் முன்பதிவை தியேட்டர்கள் தொடங்கியுள்ளது.
தற்போதிருந்தே ரசிகர்கள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து வரும் நிலையில் படத்தின் கட்டணத்தால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மல்டிபிளக்ஸ் போன்ற பெரிய திரையரங்குகளில் 1000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதன் பிறகு ஐமேக்ஸ் போன்ற திரையரங்குகளில் 1000 ரூபாய்க்கு மேல் கட்டணமானது வசூலிக்கப்படுகிறதாம். மேலும் முன்பதிவின்போதே 1000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், படம் ரிலீஸ் ஆனால் எவ்வளவு ரூபாய் வசூலிக்கப்படும் என்பதுதான் தற்போது ரசிகர்களின் கவலையாக இருக்கிறது.