பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 1 மற்றும் ராஜா ராணி 2 போன்ற சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா. இவர் ராஜா ராணி சீசன் 1 தொடரில் நடித்த போது அதே தொடரில் கதாநாயகராக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில், ராஜா ராணி சீசன் 2 சீரியலில் இருந்து பாதியிலேயே ஆல்யா மானசா விலகினார்.
இந்நிலையில் ரசிகர்கள் பலரும் ஆல்யா எப்போது சீரியல்களில் மீண்டும் என்ட்ரி கொடுப்பார் என்று கேள்வி எழுப்பி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆலியா மானசா சூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்லும் புகைப்படத்தை வெளியிட்டு தான் புதிய சீரியலில் நடிப்பதை உறுதிப்படுத்தி இருந்தார். இவர் சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகும் புதிய சீரியலில் நடிக்க இருக்கிறார்.
இந்த தொடரில் டீலா நோ டீலா இல்லை என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரிஷி கதாநாயகராக நடிப்பதாக கூறப்படுகிறது. இவர் 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சீரியல்களில் என்ட்ரீ கொடுக்கிறார். மேலும் ஆலியாவின் கணவர் சஞ்சீவ் கயல் தொடரில் நடித்து வரும் நிலையில், அத்தொடர் டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. மேலும் இதன் காரணமாக ரசிகர்கள் பலரும் கணவருக்கு போட்டியாக ஆலியாவும் அதே டிவியில் களமிறங்கியுள்ளார் என்று கேலியாக பதிவிட்டு வருகிறார்கள்.