ரிஷபம் ராசி அன்பர்களே..!
மனைவி மற்றும் மக்களின் மீது பாசம் அதிகரிக்கும்.
அரசு ஆதரவால் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உற்சாகத்தினால் உள்ளம் மகிழும். இன்று தகுதித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். செயல்களில் எதிர்பார்த்த நல்லபலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் உதவியால் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். பணவரவு நன்மையைக் கொடுக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். சொன்ன வாக்கை காப்பாற்றுவீர்கள்.
நட்பு வட்டம் விரிவடையும். அரசு துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். சில காரியங்களை மட்டும் கடுமையான சூழலுக்கு பிறகே முடிக்க முடியும். புதிய வேலைவாய்ப்புகள் இன்று அமையக்கூடும். வெளிவட்டாரத் தொடர்புகளால் முன்னேற்றமான தருணங்களை அமைத்துக்கொள்ள முடியும். பயணங்களால் நல்லபயன் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உங்களிடம் அன்பாக நடந்துக் கொள்வார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உழைப்பால் உயரும் நாளாக இன்றையநாள் இருக்கும். இன்று காதலில் உள்ளவர்களுக்கு உன்னதமான நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் அமையும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்துக் கொள்ளுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்.