தேசிய தடகள போட்டியில் பதக்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
அசாம் மாநிலத்தில் உள்ள கவுக்காத்தியில் 37-வது தேசிய தடகள உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. இதில் 16 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஆலிஸ் தேவ பிரசன்னா வெண்கல பதக்கம் வென்றார்.
மேலும் 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வ.ஓ.சி கல்லூரி மாணவி சஹானா வெண்கல பதக்கம் வென்றார். போட்டியில் பதக்கம் வென்ற இந்த இரண்டு மாணவிகளுக்கும் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மையம் கட்சியின் மாவட்ட செயலாளர் பங்கேற்று மாணவிகளை பாராட்டி ஊக்கத்தொகையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மேலும் பலர் கலந்து கொண்டார்கள்.