Categories
மாநில செய்திகள்

மின் கட்டணம் கட்டியாச்சா…? தமிழக மக்களுக்கு வந்தது புது தலைவலி….!!!!

ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்னோடு இணைத்தால் மட்டுமே இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்த முடியும் என்பதால் நுகர்வோர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளார்கள்.

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆன்லைனில் மின் கட்டணத்தை பலரால் செலுத்த முடியவில்லை. அவர்களை ஆதார் அட்டையை இணைக்க சொல்லி வலியுறுத்துகிறது இணையதளம். அதே நேரத்தில் ஆதாரை இணைப்பதிலும் பல சிக்கல்கள் நீடிக்கின்றன. இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மக்களிடம் இருந்து கோரிக்கை எழுகிறது.

Categories

Tech |