Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியார் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

சென்னை திருநின்றவூர் ஏஞ்சல்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் வினோத் என்பவர் அப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் வினோத்தை கைது செய்ய வலியுறுத்தி நேற்று திடீரென 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, பள்ளி தாளார் வினோத் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து திருநின்றவூர் தனியார் பள்ளிக்கு ஒருவாரத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |