நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. பெரும்பாலான விவசாயிகள் இந்த பணம் பெறுவதற்கு தகுதியானவர்கள். இருந்தாலும் வருமான வரி செலுத்தக்கூடிய விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் பணம் பெறுவதற்கு தகுதி இல்லாதவர்கள்.
இருந்தாலும் வருமான வரி செலுத்தக்கூடிய தகுதி இல்லாத விவசாயிகளுக்கும் இந்த திட்டத்தின் கீழ் தவறுதலாக பணம் வந்துள்ளது. எனவே தவறுதலாக பணம் பெற்றுக் கொண்ட தகுதி இல்லாத மற்றும் வருமான வரி செலுத்தக்கூடிய விவசாயிகள் தங்களின் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. அதன்படி தகுதி இல்லாத விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பணம் பெற்று இருந்தால் குறிப்பிட்ட சில வங்கி கணக்குகளுக்கு பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருமான வரி செலுத்தியதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருந்தால்
- வங்கி கணக்கு எண்: 40903138323
- IFSC: SBIN0006379
மற்ற காரணங்களுக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தால்
- Acc number: 4090314046
- IFSC: SBIN0006379
ஆகிய வங்கி கணக்குகளுக்கு கிசான் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும். மேலும் மோசடி கும்பல்களிடம் சிக்காமல் உரிய வங்கி கணக்கு எண்ணுக்கு பணத்தை அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.