Categories
மாநில செய்திகள்

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் போலீஸ் மீது கேஸ் போடுறீங்களா….? கோர்ட்டின் அதிரடி உத்தரவால் ஆடிப்போன மனுதாரர்….!!!!!!

சென்னையில் சட்டவிரோதமான முறையில் செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு எதிராக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த கலா மற்றும் முத்துக்குமார் என்பவர்கள் நடவடிக்கை எடுத்த 7 காவலர்கள் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி காவல்துறையினருக்கு எதிராக ஆதாரம் இன்றி  குற்றங்களை சுமத்துவது மிகவும் தவறானது என்று கூறினார்.

அதன் பிறகு காவல்துறையினர் மீது ஆதாரமின்றி‌ குற்றம் சுமத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கின் காரணமாக காவல்துறையினரால் தங்களுடைய கடமைகளை செய்ய முடியவில்லை. போலீசார் மீது குற்றம் சுமத்தும் போது உரிய முறையில் விசாரணை நடத்திய பிறகு தான் நடவடிக்கை எடுக்க முடியும்.

சட்டம் மற்றும் ஒழுங்கை காப்பாற்றும்போது ஏராளமான பிரச்சனைகளை சந்திக்கும் போலீசாரை சுதந்திரமாகவும், நியாயமாகவும் கடமைகளை செய்ய அனுமதிக்க வேண்டும். இந்நிலையில் ஆதாரம் இன்றி குற்றம் சுமத்தியதன் காரணமாக வழக்கு செலவுக்காக 7 காவலர்களுக்கும் மனதாரர் தலா ரூபாய் 5000 வீதம் 35 ஆயிரம் ரூபாயை கொடுக்க வேண்டும். மேலும் இந்த தொகையை சம்பந்தப்பட்ட நபர்கள் 4 வார காலத்திற்குள் காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Categories

Tech |