Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊர்வலம் நடத்துவதற்கு கட்டுப்பாடுகள்….. ஐகோர்ட்டில் RSS அமைப்பு மேல் முறையீடு….!!!!!

தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு ஊர்வலம் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவல்துறையினர் ஊர்வலம் நடத்துவதற்காக அனுமதி கொடுக்க மறுத்து விட்டனர். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஊர்வலம் நடத்த காவல்துறையினர் அனுமதி கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் படி கடந்த 2-ம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பு ஊர்வலம் நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்த நிலையில் நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததன் காரணமாக ஊர்வலத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒத்திவைப்பதாக அறிவித்தது.

அதாவது தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடம் ஆகிய 6 இடங்களை தவிர்த்து மீதமுள்ள 44 இடங்களில் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அதன் பிறகு ஊர்வலத்தின் போது பாடல்கள் பாட, ஜாதி, மதம், தனிப்பட்ட நபர்கள் குறித்து தவறாக பேச, கருத்து தெரிவிக்க மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகள் குறித்து பேச போன்றவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

அதோடு லத்தி மற்றும் கம்பு உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துச் செல்லக்கூடாது எனவும், உள்அரங்கிலோ அல்லது 4 சுவர்களுக்குள்ளோ ஊர்வலத்தை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பு தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை கூடிய விரைவில் நீதிமன்றத்தில் வரும் என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த 6-ம் தேதி கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் ஆர்எஸ்எஸ் அமைப்பு ஊர்வலம் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |