Categories
தேசிய செய்திகள்

இதற்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்…. இந்திய தேர்தல் ஆணையர் விவகாரம்…. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு…..!!!!

தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டது குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1985-ஆம் ஆண்டு முதல் ஐஏஎஸ் அதிகாரியான  அருண் கோயல் மத்திய அரசின் கனரா தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 37 ஆண்டு மத்திய அரசில் பணியாற்றி வந்த இவருக்கு தற்போது 60 வயதாகிறது. இதனால் டிசம்பர் 31-ஆம் தேதி  இவரது பதவி காலம் முடிவடைகிறது. இந்த நிலையில் அருண் கோயல்  கடந்த 19-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனது  பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இதனையடுத்து மறுநாள் சனிக்கிழமை அவரை இந்திய தேர்தல் ஆணையராக மத்திய அரசு நியமித்தது.  கடந்த திங்கட்கிழமை அவர் இந்திய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் மத்திய அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே அவர்  இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு 5  நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை  விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அருண்  கோயல் இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது எப்படி? அதில் நடைமுறைகள் எவ்வாறு பின்பற்றப்பட்டது மற்றும் நியமன ஆணை உள்ளிட்டவை குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இந்த வழக்கு வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வரும்  எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |