Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தா உடல்நிலை மோசம்….? உண்மை நிலவரம் என்ன….? மேனேஜர் வெளியிட்ட தகவல்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது யசோதா திரைப்படத்தில் இவர் நடித்துவரும் நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டார். இவர் விரைவில் குணமடைய பல திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூகவலைதள பக்கங்களில் வாழ்த்து தெரிவிக்கும் நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் நான் சொன்னபடி சில நாட்கள் நல்ல நாட்களாகவும், சில நாட்கள் மோசமான நாட்களாகவும் இருக்கிறது.

உயிருக்கு போராடும் நிலையில் நான் உள்ளதாக செய்திகள் பரவிவருகிறது. இப்போது வரை நான் சாகாமல் தான் இருக்கிறேன் என்று நடிகை சமந்தா கண்ணீருடன் வேதனை தெரிவித்தார். மேலும், இதுபோன்ற செய்திகளை தவிர்க்க வேண்டும். என்று வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில் நடிகை சமந்தாவின் உடல்நிலை குறித்து இன்று ஊடகங்களில் செய்தி வெளியானது. உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதில கூறப்பட்டிருந்தது. இந்த செய்தியை சமந்தாவின் மேலாளர் முற்றிலுமாக மறுத்துள்ளார். சமந்தா தன்னுடைய வீட்டில் ஆரோக்கியமாக இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |