Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… தமிழ் படங்களை வெளியிடுவதில் அரசியல் சிக்கல் இருக்கிறதா….? நடிகர் விஷ்ணு விஷாலின் அதிரடி பேட்டி….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் தற்போது ‘கட்டா குஷ்தி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படக்குழுவினர் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஷ்ணு விஷால், “இந்த படத்தில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் குறித்து கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து தென்னிந்திய படங்கள் தற்போது பாலிவுட் படங்களை விட அதிகமாக இந்திய அளவில் பேசப்படுகிறது‌. இதனைத்தொடர்ந்து ரெட் ஜெயன்ட் நிறுவனம் அனைத்து திரைப்படங்களையும் கட்டாயப்படுத்தி வாங்கி வெளியிடுகிறார்கள் என்பது உண்மை அல்ல. ஆனால் தமிழ் படங்களை சில மொழி நிறுவனங்கள் வெளியிடுவதில் சில நெருக்கடிகளை கொடுப்பதற்கு பின்னால் பெரிய அரசியல் இருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |