கேரள மாநிலம் கோட்டயம் ஏட்டுமானூரில் கலால் துறையினரை கண்டு கஞ்சாவை விழுங்கிய இளைஞர் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட நபர் மம்மூட்டைச் சேர்ந்த லிஜூமோன் ஜோசப் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சங்கராந்தி-பேரூர் சாலையில் நேற்று இரவு 8 மணியளவில் நடந்துள்ளது. ஏட்டுமானூர் கலால் குழுவினர் மம்மூட் சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த லிஜூமோன் உடல் பரிசோதனைக்கு பயந்து தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் கலால் குழுவினர் அவரை கையும் களவுமாக பிடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கஞ்சாவை விழுங்கிய லிஜூமோன், கோட்டயம் மருத்துவ கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன்பின் அவர் விழுங்கிய கஞ்சாவை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.
அத்துடன் அவரிடமிருந்து சிறிய கஞ்சா பொட்டலங்களும் கைப்பற்றப்பட்டது என கலால் குழு தெரிவித்து உள்ளது. ஏட்டுமானூர் மற்றும் சங்கனாச்சேரி காவல் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்ட பெரும்பாலான போதைப்பொருள் மற்றும் கஞ்சா வழக்குகளில் லிஜூமோன் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.