சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பகுதியில் கூலி தொழிலாளியான அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு அண்ணாமலை ஏலச்சீட்டு நடத்தி பலரிடம் பணம் வாங்கியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகு அண்ணாமலை பணம் கொடுக்காமல் பொதுமக்களை ஏமாற்றியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அண்ணாமலையை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி அண்ணாமலைக்கு 10 மாதம் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.