Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு….. வெளியான சூப்பர் குட் நியூஸ்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!!!

EPFO ​​ஊழியர்களுக்கு மத்திய அரசானது ஒரு பெரிய பரிசை வழங்கி இருக்கிறது. அதாவது, PF வட்டிப்பணம் விரைவில் உங்களது கணக்கில் கிரெடிட் செய்யப்படும். 2022-ம் நிதி ஆண்டுக்கான வட்டிப்பணம் உங்களது கணக்கில் வரத் துவங்கிவிட்டது. எனினும் இதற்கு பிறகும் பலரின் கணக்கில் வட்டி தொகை கிரெடிட் செய்யப்படவில்லை. இந்த பிரச்னை தொடர்பாக அரசு தரப்பில் கூறியதாவது, சாப்ட்வேர் அப்டேட் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசானது PFக்கு 8.1% வட்டியை கொடுக்கிறது.

இந்த வட்டிவிகிதம் சென்ற 40 வருடங்களில் இல்லாத அளவு குறைந்ததாகும். அதே சமயத்தில் இதற்கு முன்பு 1977-78ல் 8 % வட்டி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து மிஸ்டுகால் கொடுத்து வட்டித் தொகையினை  சரிபார்க்கலாம். அந்த அடிப்படையில் 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுக்க வேண்டும். அதேபோல் அதிகாரப்பூர்வமான இணையதளமான epfindia.gov.in வாயிலாகவும் நீங்கள் பேலன்ஸ்-ஐ செக் செய்யலாம். இவற்றில் யூஏஎன் எண், பாஸ்வேர்டு மற்றும் கேப்ட்சா விபரங்களை உள்ளிட்ட பிறகு உறுப்பினர் ஐடியை தேர்ந்தெடுக்கவும்.

அதன்பின் இ-பாஸ்புக்கில் உங்களது இருப்பை சரிபார்க்கலாம். மேலும் UMANG செயலி வாயிலாக செக் செய்யலாம். அதாவது UMANG செயலியில் EPFO ​​என்பதை கிளிக் செய்யவும். பின் வியூ பாஸ்புக் என்பதைக் கிளிக்செய்து அங்கு யூஏஎன் எண் மற்றும் பாஸ்வேர்டை நிரப்பவேண்டும். தற்போது மொபைலுக்கு வரக்கூடிய OTPஐ வைத்து PF இருப்பை சரிபார்க்கலாம். PF கணக்கு இருப்பினை தெரிந்துகொள்ள 7738299899 என்ற எண்ணிற்கு SMS அனுப்பலாம். நீங்கள் இந்த மொபைல் எண்ணுக்கு மொழியினை தேர்வுசெய்ய EPFOHO UAN ENG என அனுப்பலாம்.

Categories

Tech |