Categories
தேசிய செய்திகள்

பேடிஎம் வழியே யுபிஐ எண்…. எப்படி மாற்றுணும் தெரியுமா?…. இதோ ஈஸியான வழிமுறைகள்…..!!!!

உள் நாட்டு டிஜிட்டல் செயலியான Paytm வாயிலாக வாடிக்கையாளர்கள் எளிமையாக பணப் பரிமாற்றம் செய்யலாம். Paytm வாடிக்கையாளர்கள் செயலியில் தங்களது UPI பின்னை எளிதாக உருவாக்கலாம் அல்லது மாற்றலாம். தற்போது Paytm வழியே உங்களது UPI பின்னை மாற்றுவது எப்படி என்பதை இப்பதிவில் நாம் தெரிந்துகொள்வோம்.

# உங்கள் ஸ்மார்ட் போனில் Paytm செயலியை திறக்க வேண்டும்.

# செயலியின் இடதுபக்கத்தில் உள்ள Paytm புரோபைல் பக்கத்துக்கு செல்லவேண்டும்.

# கீழே ஸ்க்ரோல் செய்து UPI மற்றும் Payment Settingsக்கு செல்லவேண்டும்.

# உங்களது முதன்மை வங்கிக்கணக்கு விவரங்களின் கீழ், பின்னை மாற்று விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

# உங்களது டெபிட்கார்டு விபரங்களை உள்ளிட்டு Continue பட்டனை அழுத்தவேண்டும்.

# இதனிடையில் உங்களின் முந்தைய UPI பின் உங்களுக்குத் தெரிந்தால், என் பழைய UPI பின் விருப்பத்தை நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்பதனை தேர்ந்தெடுக்கலாம்.

# உங்களது டெபிட்கார்டு விபரங்களை உள்ளிட்ட பின், பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும். பின் வழங்கப்பட்ட இடத்தில் OTP-ஐ உள்ளிட வேண்டும். இதற்கிடையில் உங்கள் பழைய UPI பின்னை நீங்கள் நினைவில் வைத்து இருந்தால், இப்படிநிலையைத் தவிர்க்கலாம்.

# புது UPI பின்னை உள்ளிட்டு அதனை உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு எளிதாக பேடிஎம் வழியே உங்களின் யுபிஐ எண்ணை நீங்கள் மாற்றம் செய்யலாம்..

Categories

Tech |