தமிழகத்தில் பெருகிவரும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் ஓர் நற்செய்தி கொடுத்துள்ளார்.
ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்த கால்பந்து தொடரானது அதிர்ச்சி தோல்விகளையும், வரலாற்று வெற்றியையும் செதுக்கி கொண்டிருக்கிறது. தினம் தினம் சுவாரசியமான போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசு கால்பந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தும் செய்தி ஒன்றை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பெருகிவரும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நற்செய்தி.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களின் கோரிக்கையை ஏற்று, கத்தாரில் நடைபெற்று வரும் FIFA WORLD CUP 2022 போட்டிகளை அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் SPORTS 18 சேனலில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம்.— Mano Thangaraj (@Manothangaraj) November 24, 2022
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், “தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களின் கோரிக்கையை ஏற்று, கத்தாரில் நடந்து வரும் FIFA WC போட்டிகளை அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் SPORTS 18 சேனலில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம்” என்று அறிவித்துள்ளார்.