Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…வாக்குவாதம் வேண்டாம்..தடுமாற்றங்கள் ஏற்படும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று பின் விளைவு உணர்ந்து பேசுவது நான் ரொம்ப நல்லது. யாரிடமும் கூடுமானவரை வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் பெற கூடுதல் உழைப்பு அவசியம் இன்று கூடும். அதிகம் பயன் தராத பொருட்களை தயவு செய்து வாங்க வேண்டாம். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் சில தடுமாற்றங்கள் ஏற்படும். தடைகளும் வந்து செல்லும் லாபம் கொஞ்சம் குறையக்கூடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். கடுமையான உழைப்பும் இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. பொறுப்புகளை உணர்ந்து கொண்டு அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ளுங்கள், அது போதும். இன்று  மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கடுமையாக உழைத்து  பாடங்களைப் படியுங்கள். தேர்வு முடியும் வரை கல்வியில் மட்டும் ஆர்வம் கொள்ளுங்கள், விளையாட்டை தயவுசெய்து ஓரங்கட்டிவிட்டு பாடங்களில் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டும் இல்லை இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே  நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |