திமுக கட்சியில் புதிய இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி செயலாளர்கள் குறித்த அறிவிப்பை பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள நிலையில், திமுக இளைஞர் அணியின் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். அதன் பிறகு கனிமொழி எம்பிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதால், மகளிர் அணி செயலாளர் பதவி ஹெலன் டேவிட்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது. திமுக கட்சியின் இளைஞரணி செயலாளராக முதல்வர் ஸ்டாலின் மற்றும் சாமிநாதன் போன்றவர்கள் இருந்த நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் செயலாளராக இருக்கிறார்.
இதனால் திமுகவின் இளைஞர் அணி எப்போதுமே வலிமை மிகுந்த அணியாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு தேர்தல்களிலும் இளைஞர் அணிக்கு கணிசமான அளவு வாய்ப்புகள் கிடைப்பதால் இளைஞர் அணியினர் மிகவும் சுறுசுறுப்பாகவும், பொறுப்புடனும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் திமுக இளைஞர் அணியில் மாநிலச் செயலாளர் மற்றும் துணை செயலாளராக 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி,
1. உதயநிதி ஸ்டாலின் (பி.காம்) சட்டமன்ற உறுப்பினர், மாநில செயலாளர்
2. எஸ். ஜோயல் (பி.ஏ.பி.எல்) மாநிலத் துணைச் செயலாளர்
3. ந. ரகுபதி (எ) இன்பா ஏ.என்.ரகு (பி.பி.ஏ, எல்.எல்.பி), மாநிலத் துணைச் செயலாளர்
4. நா. இளையராஜா. (பி.இ), மாநிலத் துணைச் செயலாளர்
5. ப. அப்துல் மாலிக், மாநிலத் துணைச் செயலாளர்
6. கே.இ. பிரகாஷ், (பி.ஏ), மாநிலத் துணைச் செயலாளர்
7. க. பிரபு (பி.காம்), மாநிலத் துணைச் செயலாளர்
8. பி.எஸ். சீனிவாசன், மாநில துணைச் செயலாளர
9. கு.பி. ராஜா (எ) பிரதீப் ராஜா (பி.எஸ்.சி), மாநிலத் துணைச் செயலாளர்
10. சி. ஆனந்தகுமார் (பி.இ), மாநிலத் துணைச் செயலாளர்