தமிழ்நாடு காங்கிரஸ் ரூபி மனோகரனை சஸ்பெண்ட் செய்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்துள்ளது காங்கிரஸ்..
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் பதவியை வகித்து வருகிறார் எம்எல்ஏ ரூபி மனோகரன்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பதவியில் இருந்து ரூபி மனோகரன் எம்எல்ஏ தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறார் என ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர் ராமசாமி இன்று தெரிவித்தார். சத்தியமூர்த்தி பவனில் கடந்த நவம்பர் 15ஆம் தேதி நடந்த மோதல் விவகாரத்தில் ரூபி மனோகரன் மீது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்தது. ரூபி மனோகரன் முறையாக பதில் அளிக்கும் வரை அவரை தற்காலிகமாக நீக்கி வைக்க குழு முடிவு செய்தது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி.
இந்நிலையில் ரூபி மனோகரன் மீதான நடவடிக்கையை நிறுத்தி வைத்து காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அறிவித்துள்ளார். ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர் ராமசாமி எடுத்த நடவடிக்கை எனது கவனத்துக்கு வந்தது என்றும், உரிய நடைமுறையை பின்பற்றாமல் நியாயமற்ற முறையில் ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.. எனவே தமிழ்நாடு காங்கிரஸ் ரூபி மனோகரனை சஸ்பெண்ட் செய்தது செல்லாது..