சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று சிலர் உங்களுக்கு உதவுவது போல சிலர் பாசாங்கு செய்யக்கூடும். யாரையும் தயவுசெய்து கண்மூடித்தனமாக நம்பி விடாதீர்கள். அவரிடம் எந்தவித பொறுப்புகளையும் ஒப்படைக்காதீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க நிதானமான அணுகுமுறை தான் பின்பற்ற வேண்டும். செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படுத்துவீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது, குடும்பத்தில் ஏதாவது ஒரு சிலர் சண்டைகள் வந்துகொண்டேதான் இருக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது மூலம் ரொம்ப நல்லது.
பிள்ளைகள் பற்றிய கவலைகள் இருந்துகொண்டேதான் இருக்கும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் கொஞ்சம் வாக்குவாதம் ஏற்படலாம். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள், மனம் அமைதியாக இல்லையேல் ஏதேனும் பாடல்களை ரசித்து கேட்பது ரொம்ப நல்லது. அமைதியாகவே இருக்க இல்லையேல் தியான முறையை கையாளுங்கள், ஓரளவு சிறப்பானதாக இருக்கும். மாணவச் செல்வங்கள் தேர்வு முடியும் வரை கல்வியில் ஆர்வமாக இருந்து பாடங்களைப் படியுங்கள். உங்களுக்கு எப்போதுமே வெற்றி வாய்ப்புகள் வந்து செல்லும், கவலை வேண்டாம்.
இருந்தாலும் கவனமாக பாடங்களைப் படியுங்கள். தேர்வு முடியும் வரை கொஞ்சம் கடினமாக உழையுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்