திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோட்டில் இருக்கும் தறிபட்டறையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் தெருவில் இருக்கும் மின் கம்பத்தில் சாய்ந்தபடி விஜயகுமார் செல்போன் பேசி கொண்டிருந்தார். அப்போது மின் கம்பத்தோடு இணைத்து தரையில் பதிக்கப்பட்ட எர்த் கம்பியை பிடித்ததால் திடீரென தீப்பொறி பறந்து விஜயகுமாரை மின்சாரம் தாக்கியது.
இதனால் அவரது நெஞ்சு பகுதியும், 2 கைகளும் கருகி வலி தாங்க முடியாமல் அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் விஜயகுமாரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.